சென்னை: சென்னையில் இருந்து வாரணாசி மற்றும் புனேவுக்கு விமான சேவைகள் வரும் 30ந்தேதி முதல் தொடங்குவதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.
“புனே-வாரணாசி போன்ற புதிய இணைப்புகளுடன், எங்கள் விமானங்கள் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சில இடங்களுக்கு தடையற்ற இணைப்பை உறுதி செய்கின்றன” என ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை வணிக அதிகாரி டெபோஜோ மகரிஷி தெரிவித்து உள்ளார்.
“புனே-வாரணாசி போன்ற புதிய இணைப்புகளுடன், எங்கள் விமானங்கள் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சில இடங்களுக்கு தடையற்ற இணைப்பை உறுதி செய்கின்றன” என்று ஸ்பைஸ்ஜெட்டின் தலைமை வணிக அதிகாரி டெபோஜோ மகரிஷி கூறினார்.
புனே முதல் வாரணாசி வரை:
மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு புனே சென்றடைகிறது. வாரணாசியில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.55 மணிக்கு புனே சென்றடைகிறது
சென்னை முதல் புனே வரை:
இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு சென்னை சென்றடையும். புனே – அதிகாலை 2.05 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.25 மணிக்கு சென்னை சென்றடையும்.
புனேவைத் தவிர, அகமதாபாத், ஸ்ரீநகர் மற்றும் பெங்களூரிலிருந்து கோவாவுடன் இணைக்கும் புதிய விமானங்களும், தூத்துக்குடி, போர்பந்தர் மற்றும் டேராடூன் ஆகிய மூன்று புதிய இடங்களையும் அறிமுகப்படுத்துகின்றன.
இதனுடன், போர்பந்தர் ஏப்ரல் 1, 2025 முதல் வாரத்திற்கு இரண்டு முறை (செவ்வாய் மற்றும் வியாழன்) இயக்கப்படும் இடைவிடாத விமானத்துடன் மும்பையுடன் இணைக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.