டில்லி

நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய பாஜக தலைவர் ஜே பி நட்டா உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது குறித்துப்  பல ஊகங்கள் எழுந்துள்ளன.

மேற்கு வந்த தேர்தல் முடிவுகள் கடந்த 2 ஆம் தேதி வெளியானது.  இதில் திருணாமுல் காங்கிரஸ் 271 இடங்களை வென்று பெரும்பான்மை பெற்றது.   பாஜகவுக்கு 77 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது   முதல்வர் மம்தா பானர்ஜி தனது நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார்.   தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த கலவரங்களில் சுமார் 12க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த கலவரங்களில் திருணாமுல் காங்கிரஸ் அல்லாதோர் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி9ன.   இந்த கலவரங்களை தொடர்ந்து பாஜகவினரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்க பாஜக தேசியத் தலைவர் மேற்கு வங்கம் வந்தார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது திருணாமுல் காங்கிரசார் வன்முறையால் மேற்கு வங்கத்தில் மக்கள் அச்சம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

டில்லிக்கு அவர் திரும்பியதும் நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மேற்கு வங்க நிலை குறித்துத் தெரிவித்துள்ளார்.   அப்போது அவர்கள் இருவரும் மேற்கு வங்க வன்முறையை தொடர்ந்து அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது விவாதித்ததாக ஊகங்கள் எழுந்துள்ளன.   ஆனால் தற்போது தேர்தல் நடந்து முடிந்த கையோடு குடியரசு தலைவர் ஆட்சி அமலாகாது என வேறு சிலர் கூறி உள்ளனர்.

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்குத் தயாராகி உள்ளது.  அம்மாநிலத்தில் சர்பானந்த் சோனோவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் முதல்வர் பதவியை பெ\ர தயாராக உள்ளனர்.  ஆனால் இதுவரை பாஜக தலைமை பாராளுமன்ற குழுக் கூட்டத்தை நடத்தாமல் உள்ளது.   எனவே அது குறித்து அமித்ஷாவுடன் ஜே பி நட்டா விவாதித்ததாக மற்றொரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.