சேலம்
வரும் ஏப்ரல் 8 முதல் சேலம் மற்றும் எர்ணாகுளம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் ஒன்று மூன்று மாதங்களுக்கு இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
சேலத்தில் இருந்து கேரளா பக்கத்தில் இருந்தாலும் அந்த தடத்தில் செல்லும் பல ரெயில்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்தே புறப்படுகின்றன. இதனால் சேலம் பயணிகளுக்கு சிரமம் உண்டாகிறது. எனவே வார இறுதியிலாவது சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதையொட்டி சேலம் ரெயில்வே கோட்டம் புது ரெயில் இயக்கம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரெயில் எண் 0601 வரும் ஏப்ரல் எட்டாம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை மூன்று மாத காலத்துக்கு இயக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.45க்கு எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் அடுத்த நாள் காலை 6.40க்கு சேலம் வந்து சேரும்.
வண்டி எண் 0602 வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் ஜுலை2 ஆம் தேதி வரை திங்கட்கிழமகளில் மூன்று மாத காலத்துக்கு இயக்கப்படும். திங்கட்கிழமை இரவு 10.30 மணிக்கு சேலத்தில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்
எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர் ஈரோடு மார்க்கமாக சேலம் வரை வரும் இந்த ரெயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி 2, மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டி 3,படுக்கை வசதி பெட்டி 13 மற்றும் 2 பொதுப் பெட்டிகள் இருக்கும். இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.