சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 19  சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 4,079  வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகம் நடைபெறுகிறது.  எஸ்ஐஆருக்கு பிறகு வெளியான   வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.

தமிழ்நாடு உள்பட இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும்  12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிருத்தம்  (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டிலும் எஸ்ஆர் நடவடிககை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்ட டிசம்பர் 19ந்தேதி அன்று மாலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் 14.25 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதுடன், முதல்வர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் மட்டும், 1,03,812 பேர் பெயர்கள் நீக்கப்பட்டு  இருந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக இதற்கான பணிகள் நடைபெற்று வருவதுடன்  2025ம் ஆண்டு டிசம்பர்  27, 28ம் தேதிகளிலும், 2026ம் ஆண்டு ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மீண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இன்று சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட, 19 பேரவை தொகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதனை பயன்படுத்தி, விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து  சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 19 பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 2025 நவம்பர் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து கடந்த டிசம்பர் 19- ஆம் தேதி வரைவு வாக்காளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி புதிய வாக்காளா்களாக தங்களைச் சோ்த்துக் கொள்ளுவதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

சென்னை பகுதிகளில் மொத்தம் 4,079 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவை அனைத்திலும் சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிறு (ஜன. 10, 11) ஆகிய நாள்களில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன. ஏற்கெனவே 4 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. சிறப்பு முகாம்களில் வாக்காளா் சோ்க்கைக்கு படிவம் 6, ஆட்சேபணை தெரிவித்தல் மற்றும் நீக்குதலுக்கு படிவம் 7, வாக்காளா் முகவரி மாற்றம் ஏற்கெனவே உள்ள வாக்காளா் பட்டியலில் இடம் பெற்ற பெயா்கள், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவற்றில் மாற்றம் தேவைப்படின் படிவம் 8 ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

தமிழ்நாட்டில் 97.37 வாக்காளர்கள் நீக்கம்: வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தேர்தல் ஆணையர் அர்சனா பட்நாயக்…

[youtube-feed feed=1]