
:சென்னை:
அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைத் துவங்கினர். இதையடுத்து பல ஊர்களல் உள்ள பணி பணைகளில் பேருந்தை நிறுத்துவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர்.
இதனால் பேருந்துகள் இயங்கவில்லை. பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதையடுத்து பணிமணி மற்றும் தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தவிர, சிறப்பு ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, திருவாரூருக்கு சென்னையில் இருந்து நாளை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel