சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் கங்குவா.
இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் திரையரங்கில் வெளியாக உள்ள படமான கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14ம் தேதி மட்டும் 5 காட்சிகள் அதாவது காலை 9 மணிமுதல் இரவு 2 மணி வரை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் உலகமெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் திரையிட இந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டுள்ளார்.
விஷுவல் எஃபெக்ட்ஸுக்காக இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அமரன் படத்தின் வெற்றியை அடுத்து அதிக அளவிலான திரையரங்குகளில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கங்குவா படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்திருப்பது விநியோகிஸ்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.