டாக்கா:

மியான்மரில் சுற்றுப்பயணம் செய்து உள்நாட்டு கலவரத்தால் வங்காளதேசம் நாட்டுக்கு புலம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் மீள்குடியேற்றம் தொடர்பாக அந்நாட்டு அரசுடன் ஆலோசனை செய்த போப் பிரான்சிஸ் வங்காளதேசம் வந்தார்.

டாக்கா நகரில் உள்ள சுஹ்ராவார்டி உட்யன் பூங்காவில் மாபெரும் ஜெபக் கூட்டத்தை அவர் நடத்தினார். இந்த கூட்டத்தில் 16 பேரை பாதிரியார்களாக்கி அவர் ஆசீர்வதித்தார். இந்த ஜெப கூட்டத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர்.

முஸ்லிம், இந்து, புத்த, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த மக்களுக்காக கூட்டுப் பிரார்த்தனை நடத்திய போப் பிரான்சிஸ், அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களின் தலைவர்கள் சிலரை சந்தித்து பேசினார்.