சென்னை:
சென்னையில் இன்று மழை கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் காரணத்தினால் பருவமழைக்கால நோய்களான டெங்கு, ப்ளு என்கின்ற இன்புளுயன்சா, காலரா, டைபாய்டு, சேற்றுப்புண் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவ முகாம்களில் சோதனை செய்பவர்களுக்கு காய்ச்சல் மற்றும் இதர உபாதைகள் இருப்பது கண்டறியப்பட்டால், மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel