சென்னை
கொரோனா சிகிச்சைக்கு மட்டுமான தனி மருத்துவமனை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவில் 650க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை சுமார் 27 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமான தனி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டு தயாராக உள்ளது.
இந்த மருத்துவமனையில் தனிமை வார்டுகள், செயற்கை சுவாசத்துக்கான வெண்டிலேட்டர்கள் ஆகிய வசதிகள் உள்ளன.
இந்த தகவலை சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இந்த மருத்துவமனையை நேற்று சுகாதார அமைச்சர் பார்வை இட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
[youtube https://www.youtube.com/watch?v=1egTUClxcyk]
[youtube-feed feed=1]