கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கம்போடியாவில் உள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப சிறப்பு விமானம் 19ந்தேதி புறப்பட இருப்பதாக கம்போடியாவில்உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியா, உள்பட உலகின் 200க்கும்மேற்பட்ட நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான கம்போடியாவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பல நாடுகள் சர்வதேச விமான சேவைகளை கடந்த 2 மாதங்களாக முடக்கி வைத்துள்ளன. இதனால், வெளிநாடுகளில் சிக்கி உள்ள இந்தியர்கள், சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கம்போடியாவில் சிக்கி உள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்க சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் ( India embassy of PhnomPenh ) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
அதில், இந்தியா தூதரகம் கம்போடியா வணக்கம். அனைவருக்கும் உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துக்கள்.
கோவிட் 19 அவசரகால நடவடிக்கை யாக உலகம் முழுதும் இந்திய அரசு, இந்தியக் குடிகளை சொந்த நாட்டிற்கு திரும்ப உதவும் வேளையில் தற்போது கம்போடியாவிலும்,சொந்த நாட்டிற்கு திரும்ப விருப்பமுள்ளவர்களுக்காக ஒரு சிறப்பு விமான பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.
19.06.20 முதல் AI 1303 விமானம் மூலமாக புனாம் பென்னிலிருந்து, டெல்லிக்கு செல்லலாம்.
மற்றொரு விமானம் பசாக்கா ஏர்லைன்ஸ் 8 முதல் 10 வரை பயணிக்கிறது.
இந்த பயண ஏற்பாட்டை தேவைப்படுவோர் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.+85523210727.
நன்றி.
கம்போடியாவில் சிக்கி உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அங்கோர் தமிழ் சங்கம் கம்போடியா துணைத்தலைவர் திரு.இரமேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.