சென்னை:

ன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-1 (11ம் வகுப்பு) தேர்வு முடிவு வெளியான நிலையில், தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 14ந்தேதி சிறப்பு தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசின் தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்ததில்  95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 5% பேர் தோல்வியடைந்தனர்.  8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவர்கள் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இவர்களின்  93.3% மாணவர்களும் , 96.5% மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 95% பேர் தேர்ச்சி அடைந்து உடைந்துள்ளனர்.

தேர்வு எழுதிய அரசு பள்ளிகளில் 90.6 சதவிகித பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளன. இந்த நிலையில் தேர்ச்சி பெறா மாணவ மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.