சென்னை: இந்திய தொல்லியல் சங்கத்தின் சென்னைப் பிரிவு, செப்டம்பர் 13ம் தேதி முதல் பழம்பொருட்களைப் பதிவு செய்வதற்கான ஒரு சிறப்பு முகாமை நடத்துகிறது.
தனிநபர்கள், நிறுவனங்கள் வைத்துள்ள பழம் பொருட்கள் மற்றும் பரிமாற்றம் செய்யப்பட்ட பதிவுசெய்த பழம்பொருட்கள் ஆகியவற்றை, பழம்பொருட்கள் மற்றும் கலை சொத்துக்கள் சட்டம் 1972 மற்றும் விதிமுறைகள் 1973ன் படி பதிவுசெய்வது கட்டாயம்.
கற்களால் செய்யப்பட்ட சிலைகள், மங்கல் சிவப்புநிற சிலைகள், உலோகங்கள், தந்தம் மற்றும் எலும்பு, ஓவியங்கள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் செதுக்கப்பட்ட உருவங்கள் போன்றவைகளை வைத்திருப்போர் அவற்றை பதிவுசெய்வது கட்டாயம்.
இவற்றை வைத்திருப்போர், இந்திய தொல்லியல் சங்கத்தின் பதிவாளரை தொடர்புகொள்ளலாம். இதுதொடர்பான சிறப்பு முகாம் செப்டம்பர் 13 முதல் 28ம் தேதிவரை நடத்தப்படுகிறது.
பழம்பொருட்களை வைத்திருப்போர் தபால் அட்டை அளவிலான அவற்றின் 3 புகைப்படங்கள், பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களின் 3 நகல்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை www.asichennai.gov.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.