சென்னை
சென்னையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”பொதுமக்களின் வசதிக்காக வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் வரும் 14 மற்றும் 15 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன/
இதன்படி பிப்ரவரி 14-ந்தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்.
அதே போல், பிப்ரவரி 15-ந்தேி கிளாம்பக்கத்தில் இருந்து 240 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து 51 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படும்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel