சென்னை
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழக அரசு போக்குவரத்து கழகம்,
”ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி வருகிற 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு கூடுதலாக 990 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 100 பேருந்துகள் இயக்கப்படும்”
என அறிவித்துள்ளது.