சென்னை:
மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, நிஜத்தில் மனசாட்சிக்கு விரோதமாக மக்களின் மத்தியில் நடந்து கொள்கிறார் என திமுக எம்பி டி.ஆர்.பாலு கூறினார்.

நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் நாளான நேற்று அதில் கலந்து கொண்ட திமுக எம்பி டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசியனார்.
மக்களவையில் திராவிட முன்னேற்ற கழகம் தரப்பில் ஆறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச அனுமதி கேட்டோம். ஆனால், குடியரசுத் தலைவர் பதில் உரை மற்றும் பட்ஜெட் உரைக்கு பிறகே இதுகுறித்து நேரம் ஒதுக்கப்படும். அப்போது பேசலாம் என மக்களவை தலைவர் ஓம் பிர்லா மறுப்பு தெரிவித்து விட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், பிரதமர் பேசும் அனைத்தையும் நாம் உண்மை என்று எடுத்துக்கொள்ள கூடாது என்றும், ஏனெனில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும் பிரதமர், நிஜத்தில் மனசாட்சிக்கு விரோதமாக நடக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]