சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கிய நிலையில், சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவயைல் இரங்கல் குறிப்பு வாசித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (பிப்ரவரி 17ந்தேதி) தொடங்கியது. முதல்நாளே அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். தொடர்ந்து அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வமும் இடைக்கால விவசாய பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த கூட்டத்தொடர் வரும் 20ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இன்றைய 2வது நாள் அமர்வு வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்தார். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், லிங்கமுத்து மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித்பவாருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மூத்த கல்வியாளர் ச.சீ. ராஜகோபாலன் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கேள்வி நேரமும், தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்களும் நடைபெறுகிறது.