சென்னை: தமிழக சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டத்தொடரான, இன்று பேரவையின் மாற்றுத்தலைவர்களாக 6 பேரை சபாநாயகர் அப்பாவு நியமனம் செய்தார்.
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் முதல்கூட்டத் தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் நேற்று தொடங்கியது. அதையடுத்து அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் வரும் 24ந்தேதி வரை கூட்டத் தொடர் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று 2 நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இன்றைய கூட்டத்தில்,மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, கவர்னர் உரை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களை சபாநாயகர் அப்பாவு அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, எம்எல்ஏக்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா, துரை சந்திர சேகரன் ஆகியோர் பேரவையின் மாற்றுத்தலைவர்களாக நியமிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அதையடுத்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.