சென்னை: கொரோனா காலத்தில், இந்தியா – அமெரிக்கா இடையே நடைபெறவுள்ள திட்டமிடப்பட்ட விமானப் போக்குவரத்தில் ஈடுபடும் உரிமையை, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் போக்குவரத்தை நடத்துவதற்கு, நாட்டின் பல தனியார் விமான நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், அப்போட்டியில் ஸ்பைஸ் ஜெட் முந்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா – அமெரிக்கா இடையில், ஒப்புக்கொள்ளப்பட்ட வழித்தடங்களில் இந்த விமானப் போக்குவரத்து நடைபெறவுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தமும் இருநாடுகளுக்கு இடையில் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.
“இந்த ஒப்பந்தமானது, நமது சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை சிறப்பான மற்றும் அளவிடப்பட்ட முறையில் விரிவாக்குவதற்கு துணைபுரியும்” என்றுள்ளார் ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் & மேலாண் இயக்குநர்.