• பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணி யம் கொரோனா தொற்று காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். திடீரென்று அவரது உடல் நிலை கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மோசம் அடைந்தது.


உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் காக்கும் கருவிகளான வென்டிலேட்டர் கருவி மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்பட் டது. மேலும் மோசமானதை தொடர்ந்து எக்மோ சிகிச்சை அளிக்கப் பட்டது. எஸ்பிபிக்காக திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். டாக்டர்களும் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப் பட்டு வருகிறது.
இந்நிலையில் எஸ்பிபி உடல் நிலை பற்றி அவரது மகன் எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள வீடியோவில்.’ எனது அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில்; நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. நானும் என் சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளை கண்டதும் அப்பா மகிழ்ச்சி அடைந்தார்’ என தெரிவித்திருக்கிறார்.
எஸ்.பி.பி 95 சதவீதம் சுயநினைவுடன் உள்ளார். சில விஷயங்களை சொல்ல முயல்கிறார். அவரிடம் பேனா, பேப்பர் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ‘லவ் யூ ஆல்’ என்று எழுதி காட்டினார்.