40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளவர் எஸ்.பி.பி .
நெல்லூரில் எஸ்.பி.பி.க்குச் சொந்தமான பரம்பரை வீடு ஒன்று திப்பராஜுவாரி என்கிற தெருவில் உள்ளது. சென்னையில் எஸ்.பி.பி. குடியேறி விட்டதால் அவரது நெல்லூர் வீடு பல காலமாகப் பூட்டி கிடந்தது.
இந்த வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாகக் கொடுக்கப்போவதாக எஸ்.பி.பி. ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதை தற்போது செயல்படுத்தியுள்ளார். காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை ஒப்படைத்த எஸ்.பி.பி. அதில் ஒரு சமஸ்கிருத வேதப் பாடசாலையை ஆரம்பிக்கவே இந்த தானத்தைச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
Patrikai.com official YouTube Channel