மத்ரித்:

14.7 மில்லியன் யூரோ வரி ஏய்ப்பு செய்தததாக பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ மீது ஸ்பெயின் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போர்ஜூகலை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த 2010ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு நவம்பர் வரை ஸ்பானிஷில் தங்கியிருந்தார் இங்கு வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஸ்பானிஷ் வரி விதிப்பு முறையை பின்பற்ற வேண்டும்.

2010ம் ஆண்டில் தனது வருவாயை மறைப்பதற்காக ஒரு தொழில் அமைப்பை ரொனால்டோ உருவாக்கியுள்ளார். இதன் மூலம் 2011ம் ஆண்டில் 1.4 மில்லியன் யூரோ, 2012ம் ஆண்டில் 1.7 மில்லியன் யூரோ, 2013ம் ஆண்டில் 3.2 மில்லியன் யூரோ, 2014ம் ஆண்டில் 8.5 மில்லியன் யூரோ அளவுக்கு மோசடி செய்யப்பட்டு, வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதை ஸ்பெயின் வரி விதிப்பு முகமை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.

இந்த வகையில் மொத்தம் 14.7 மில்லியன் யூரோ மோசடி செய்திருப்பதாக ரொனால்டோ மீது ஸ்பெயின் அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இது குறித்து பதில் அளிக்க ரொனால்டோ தரப்பு மறுத்துவிட்டது என்று ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.