ரபரப்பான கொலை வழக்குகள், அல்லது குழந்தையின் பெற்றோரை அறிவதற்கான வழக்குகளில் அரிதாக டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்கப்படுவது இந்தியாவில் வழக்கம்.
ஆனால், நாட்டில் நடைபாதைகளில் மலம் கழிக்கும் நாய்களின் உரிமையாளர்களை கண்டறிய அவற்றின் மலத்திலிருந்து டி.என்.ஏ சோதனை நடத்தப்போகிறார்களாம் ஸ்பெயினில்.
give_this_galgo_a_home___pepi_s_dog_refuge__spain_by_velocidadbump-d6fk3jw
அந்நாட்டில் உள்ள மிஸ்லாடா மாவட்டத்தில் நாய்களை வாக்கிங் கூட்டி வரும் அதன் உரிமையாளர்கள் அதனை சாலைகள் மற்றும் நடைபாதைகளில் மலம் கழிக்க விட்டுவிடுகிறார்கள். இது குறித்து மிஸ்லாடா நகர நிர்வாகத்திடம்  பலரும் புகார் அளித்தனர்.
சாலையில் மலம் கழித்த நாயை எப்படி கண்டறிவது?
நாயின்  மலத்தின் மாதிரியை சேகரித்து டி.என்.ஏ. சோதனை நடத்தி கண்டுபிடிப்பார்களாம்.  இதற்காக வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள்,நாயின் உரிமையாளர்கள் தங்கள் நாயின் ரத்த மாதிரிகளை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ரத்த மாதிரிகளை கொடுக்காதவர்களுக்கு 300 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் ,நடைபாதைகளில் தங்கள் நாய்கள் கழிக்கும் மலத்தை அகற்றாத உரிமையாளர்களுக்கு 200 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் மிஸ்லாடா மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
உலம் ரொம்ப வேகமாத்தான் முன்னேறுது!