சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஏடிபி கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் செர்பிய அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது.

செர்பிய அணியில் பிரபல வீரர் ஜோகோவிக்கும், ஸ்பெயின் அணியில் மற்றொரு பிரபல வீரர் ர‍ஃபேல் நடாலும் இடம்பெற்றுள்ளனர்.

இந்த டென்னிஸ் தொடர் அணிகளுக்கு இடையிலான டென்னிஸ் தொடராகும். செர்பிய அணி, தனது அரையிறுதியில் ரஷ்யாவை வீழ்த்தியது.

முதல் ஒற்றையர் ஆட்டத்தில் செர்பியாவின் லாஜோவிக், கசோனோவையும், இரண்டாவது ஒற்றையர் அரையிறுதியில் ஜோகோவிக், டெனில் மேத்வதேவையும் வென்றனர். இதனால் அந்த அணி இறுதிக்குள் நுழைந்தது.

மற்றொரு அரையிறுதியில், ஸ்பெயினும் ஆஸ்திரேலியாவும் மோதின. முதல் ஒற்றையர் போட்டியில் ஸ்பெயினின் பாடிஸ்டாவும், இரண்டாவது போட்டியில் முக்கிய நட்சத்திரம் ரஃபேல் நாடலும் வெற்றிபெறவே, இறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின் அணி.