பாதிப்புகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டுவதோடு ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டையை தடைசெய்துவிட முடியாது.
இந்த வாரம், ஸ்பெயினின் மூன்றாவது பெரிய நகரமாகிய வாலென்ஸீயாவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான ஸ்பானியர்கள் காளைச்சண்டைக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அடுத்த நாள் நகரின் புதிய, இடதுசாரி மேயர், ஜோன் ரிபோ, “விலங்குகளை கொடுமைப்படுத்தும் வழக்கம் நம் சமூகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று நினைக்கும் பல மக்கள் உள்ளனனர்,” “ஸ்பெயினில், காளைகள் இந்த துன்புறுத்தல் பெறாமலிருக்க நாம் ஒரு வழி கண்டுபிடிக்க முடியுமென்றால், அது சுவாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என அறிவித்துள்ளார். மக்களை அமைதிப்படுத்தும் தீர்வாக இருக்கும் என நம்பி இதனை மேயர் ரிபோ கூறினார்.
இப்பொழுதும், விறுவிறுப்பாக ஸ்பெயினில் நடந்துக்கொண்டிருக்கும் காளைச்சண்டைப் பற்றிய விவாதமும், அந்த விந்தை பொருந்திய காளைச்சண்டையைப் போலவே மிகவும் மறக்கமுடியாததாகவும் சுவாரசியமாகவும் மாறிவிட்டது. இது வெறும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் எதிரான போராட்டம் இல்லை, இது ஒரு உயரடுக்கு ஆணாதிக்கத்திற்கும் பரந்த கொள்கையுடைய அறிவொளிமிக்க ஸ்பெயினிற்கும் நடக்கும் போராட்டமாகும்.
ஆகவே ஸ்பெயின் காளைச்சண்டையைப் பற்றிய திட்டம் போலவே ரிபோவினுடையத் திட்டமும் மக்களை வெறுப்படையவே வைத்தது.
காளைச்சண்டைப் பிரியர்களுக்கும் முக்கிய ரசிகர்களுக்கும் அவரது யோசனை “புல்ஃபைட்டிங்க் லைட்” எனத் தோன்றியது. ஆனால் எதிர்ப்பளர்களோ ரிபோ கூறும் “போர்த்துகீஸ் பாணி” காளைச்சண்டை தங்களது கவலைகளை தீர்க்காது என்றனர். போர்ச்சுகல்லில் காளைச்சண்டை முடிந்தப் பின்னர், பார்வையாளர்கள் பார்க்கமுடியாதபடி காளை கொலை செய்யப்படும்.
நவம்பர் மாதம், பொதுப் பள்ளிகளில் களைச்சண்டை பயிற்சி நிச்சயமாக இருக்குமென நாட்டின் கல்வி அமைச்சகம் ஒரு திட்டம் போட்டது. அழிந்துக்கொண்டிருக்கும் ஒரு பொழுது போக்கை புதுப்பிக்க உதவியாக இருக்குமென ஆதரவாளர்கள் கூறினார்.
1700 லிருந்து ஸ்பானிஷ் காளைச்சண்டை வழக்கத்தில் உள்ளது. அப்போது ஆண்கள் வெறுங்காலில் காளைகளை கட்டுப்படுத்தினர். அதுவரையில் காளைச்சண்டை குதிரையின் மேல் தான் முற்றிலும் நடக்கும். ஆகையால் ஒரு மனிதன், ஒரு கேப் மற்றும் ஒரு வாள் கொண்டு, ஒரு காளையைப் போராடி அடக்குவது கூட்டத்தை கவர்ந்தது. விரைவில் இந்த விந்தையைக் காண அரங்கங்கள் திறக்கப்பட்டன. காலப்போக்கில் காளைச்சண்டை ஸ்பெயினின் அடையாளமாக மாறியது. அதை சட்டவிரோதம் என அறிவித்தால் நாடே நிலை குலைந்துவிடுமென ரசிகர்கள் கூறுகிறார்கள்.
வெலென்சியாவில் ஒரு பெரும்மக்கள்திரளில் உரையாற்றும் போது,”எங்கள் மீதான அரசியல் விமர்சனங்களை நாங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளோம் எனினும் இது எங்கள் பாரம்பரியத் தொழில் இது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது” என அந்தோனியோ மொரான்டெ கமாசோ கூறினார்.
இந்த விமர்சனங்கள் நீண்டகாலமாக, அதாவது 1932 முதலே இருந்து வருகிறது. எந்தவொரு விளையாட்டிற்குமே எந்த அளவு ஆதரவு இருக்கிறதோ அந்த அளவிற்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்யும். காளைச்சண்டைய எதிர்ப்பவர்கள் சமூகவலைத்தளங்களின் மூலம் ஆதரவைப்பெற்று பலம் பெற்றதன் மூலம் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
டிசம்பரில், காளைச்சண்டைச் சார்புடைய வலது சார்பு பிரிவு, ஸ்பெயின் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்தது. அதனால் இப்போது காளைச்சண்டை எதிரிகள் அரசியல் உந்து பெறுகின்றனர். இதனால் எதிர்ப்பாளர்கள், ஸ்பெயின் எருதுகளின் பொது மறைவுக்கு ஒரு பொதுத் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இந்தியாவில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்டுள்ளதைப் போன்றே ஸ்பைனிலும் காளைச்சண்டையை முடிவுக்கு கொண்டுவர செய்யப்படும் முயற்சி பலனளிக்குமா என்பதைக் காலம் முடிவுசெய்யும்.