ஸ்பெயின்,
நாட்டில் பொருளாதார சீரழிவுக்கு காரணமான ஸ்பெயின் மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் 5 பேர் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்பெயினின் இந்த நடவடிக்கை உலக நாடுகளுக்கு முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் செல்வாக்குள்ளவர்கள், அதிகாரமிக்க பதவியில் உள்ளவர்கள், பெரும் பண முதலாளிகள் போன்றவர்களுக்கு பொதுத்துறை வங்கியின் உயரதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு கடன்கொடுத்து வங்கியையும், பணத்தையும் திவாலாக்கி வருகின்றனர். இதற்காக வங்கி அதிகாரிகள் மீது நமது நாட்டில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
ஆனால், உலக நாடுகளுக்கே முன்னோடியாக ஸ்பெயின் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள தேசிய வங்கியின் அதிகாரிகள்தான் அந்நாட்டின் பொருளாதாரச் சீரழிவிற்கு காரணம் என அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டி வங்கி உயரதிகாரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளது.
நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்பட்ட 6 வங்கிகளை இணைத்து ஒரு பொதுத்துறை வங்கியை நிறுவி, பொருளாதார சீரழிவை உருவாக்கிய குற்றத்திற்காக அவர்கள் நீதி மன்றத்தை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
இந்த பொதுத்துறை வங்கி உருவாகும்போது, இதை அனுமதிக்கக்கூடாது, இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என நிதி ஆலோசகர்கள் கடுமையான குற்ற்ச்சாட்டு கூறியும் அதை செவிமடுக்காமல் பொதுத்துறை வங்கியை நிறுவியதுதான் அவர்கள்மீது உள்ள குற்றச்சாட்டு. விசாரணை நடைபெற்று வருகிறது.
நமது நாட்டிலும் தற்போது ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் போன்ற வங்கிகளை ஸ்டேட் பாங்க் இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
அதுபோல பெரும் பணக்காரர்களான விஜய்மல்லையா போன்றவர்கள் வங்கியில் வாங்கிய கடனை திருப்ப செலுத்தாமல் ஹாயாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து விடுகின்றனர். அவர்களுக்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
மேலும், மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது இந்தியா கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்தது. இதற்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை பாயுமா? என்பது கேள்விக்குறியே… ஏனென்னறால் நாம் இருப்பது இந்தியா….
ஸ்பெயினில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று இந்தியாவிலும் நடவடிக்கை எடுத்தால்….. எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பு.