திருச்சி
திருச்சி எஸ் பி வருண்குமார் சீமான் உள்ளிட்ட நாதக தலைவர்கள் மீது மான நஷ்ட வழக்து தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
வருண்குமார் ஐ பி எஸ் திருச்சி கோட்டத்தில் எஸ்.பி.யாக பொறுப்பு வகிப்த்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக பதவி வகித்து வரும் இவரது மனைவி வந்திதா பாண்டே இவர்கள் இருவருக்கும் எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து தானும், தனது மனைவியும் விலகுவதாக வருண்குமார் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
“ஒரு சராசரி குடும்ப நபராக, குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக எக்ஸ் இணைய உரையாடல்களில் இருந்து நானும், எனது மனைவி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்.சும் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமானப்பட வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் தம்மைப் பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும் ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய அனைத்து போலி கணக்குகளையும் அதன் பின் ஒளிந்திருக்கும் சீமான் உள்ளிட்ட நாதக தலைவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்துவேன் என்றும் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்பிய கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாகவும் எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார்.