டில்லி:
சவுமியா பாலியல் பலாத்கார கொலை வழக்கில், ‘சர்ச்சைக்குரிய’ தகவல்களை கூறி, பிரச்சினைகளை ஏற்படுத்தி வரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கேரளாவில் கடந்த 2011-ம் ஆண்டு, ஓடும் ரயிலில் இருந்து சவுமியா என்ற இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் கீழே தள்ளி கொலை செய்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். கர்ஜுவின் சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஏற்கனவே, அன்னை தெரசா ஒரு ஏமாற்று பேர்வழி என்றும், கிரண் பேடியைவிட ஷாஜியா இல்மி அழகானவர் என்றும், ஆரியர்கள் மட்டுமல்ல, திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான் என்றும்,
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதலில் வர்ணித்தும், பின்னர் சிங்கமென்றும், எதிர்க்கட்சியினரை பபூன் குரங்குகள் எனவும் அநாகரீக வார்த்தைகளால் பேசியும்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்தி பரப்பியவர்கள் கைது குறித்து,தமிழர்கள் போராட தெரியாத கோழைகள் என்றும் பேசியிருந்தார்.
அதேபோல் மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை மார்க்கண்டேய கட்ஜூ விமர்சித்து மின்னஞ்சல் அனுப்பி யிருந்தார். அதற்கு மம்தா பானர்ஜி நாய்கள் குரைப்பதை கண்டு நாம் ஏன் பயப்பட வேண்டும் என்று சூடாக பதில் சொல்லியிருந்தார்.
இதைத்தொடர்ந்து சவுமியா வழக்கு தண்டனை குறைப்பு குறித்தும் கருத்து சொல்லி மீண்டும் சர்ச்சையை ஏற்படுதி இருந்தார்.
சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 7 ஆண்டு சிறைத் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கடுமையாக விமர்சித்திருந்தார்.
சவுமியா கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் தவறான தீர்ப்பு வழங்கியுள்ளது. அவசர, அவசரமாக விசாரித்து தவறான தீர்ப்பு வழங்கி விட்டது. எனவே, இதனை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், அவருக்கு எதிராக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், கட்ஜூ நேரில் வந்து ஆஜராகி விவாதிக்க தயாரா என நோட்டீஸ் அனுப்பியது.
அதனை ஏற்ற கட்ஜூ, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.