சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் வலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, சவரன் ரூ.60ஆயிரத்தை நெருக்கிய நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.1080 குறைந்து ரூ,56,680க்கு வந்துள்ளது.
சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் மீதான முதலீடு திடீரென குறைந்திருப்பதும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து இருப்பதுமே தங்கம் விலை சரிவுக்கு காரணம், வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
டாலர் குறியீடு தொடர்ந்து வலுவடையும் வரை இந்தியாவில் தங்கம் விலை அழுத்தத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் வெற்றி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வின் மென்மையான 25 பிபிஎஸ் குறைப்புக்கு இடையே, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை கடுமையாக சரிந்தது, ஸ்பாட் தங்கம் மற்றும் அமெரிக்க தங்க எதிர்காலம் 2%க்கும் அதிகமாக குறைந்துள்ளது. இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.