சென்னை: இந்திய மக்களின் விருப்ப அணிகலன்களாக உள்ள தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய விலை உயர்வை தொடர்ந்து சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை கிராமுக்க  ரூ. 200 உயர்ந்து ரூ.70,160-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதன்படி, இந்த வாரத்தின் கடந்த நான்கு நாள்களில் சவரனுக்கு ரூ. 4,365 வரை   உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.  சாதாரணமாக ஒரு சரவரனுக்கு ஏதாவது ஒரு நகை வாங்க வேண்டுமென்றால், அதற்காக செய்கூலி சேதாம், ஜிஎஸ்டி என ஒருவர் சவரனுக்கு ரூ.80ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த 9 ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை(ஏப்.9) தடாலடியாக சவரனுக்கு ரூ. 1,480 உயர்ந்து ரூ.67.280-க்கும், வியாழக்கிழமை ரூ. 1,200 உயர்ந்து ரூ.68,480-க்கும், மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரூ.1,480 உயர்ந்து ரூ.69,960-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை மேலும் சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.70,160 விற்பனை செய்யப்படுவதால் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் ரூ. 8,775-க்கும் ஒரு சவரன் ரூ. 70,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நான்கு நாள்களில் சவரனுக்கு ரூ. 4,365 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (ஏப்ரல் 11) தங்கம் விலை கிராமுக்கு 185 ரூபாய் உயர்ந்து, 8,745 ரூபாயாக அதிகரித்தது. சவரனுக்கு 1,480 ரூபாய் அதிகரித்து, 69,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தவிலை உயர்வு மேலும் தொடரும் என அஞ்சப்படுகிறது.  எப்போதும் இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை,  70,000 ரூபாயை கடந்து, நகை பிரியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தது  என கூறப்படுகிறது. மேலும், டிரம்ப் உலக நாடுகள் மீதான வரியை அதிகமா உயர்த்தி இருப்பதால்,  சீனா உடனான வர்த்தக போர் பூதாகரமாகி உள்ளது.   இதனால் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து வருகிறது.அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தது, மற்றும் மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் சற்றும் எதிர்பாராத விதமாக குறைந்தது தான் இந்த விலை உயர்வு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.