சென்னை

ந்த வருடம் தமிழகத்தில் இயல்பை விட கூடுதலாக தென்மேற்க் பருவமழை பெய்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் தென்மேற்கு பருவ மழையின் மூலம் மழை பொழிவை பெறும்.

தற்போது நாடெங்கும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகா. கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி முதல் இன்று (ஆகஸ்ட் 11) வரை தமிழக் மற்றும் புதுவையில் 263.7 மி.மீ மழை பெய்துள்ளது.

வழக்கமாக இந்த காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெய்யும் சராசரி மழை அளவு 145.4 மி.மீ ஆகும். எனவே தற்போது வரை தமிழகத்தில் இயல்பை விட இந்த வருடம் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது.