சென்னை: தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாகவும், மீனவர்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தமான், நிகோபார் தீவுகளில் தென்மேற்குப் பருவமழை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது என கூறியுள்ளது.

தமிழ்நாட்டில், தென்மேற்குப் பருவமழை (Southwest Monsoon) என்பது வழக்கமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை (122 நாட்கள்) இந்தியாவில் பெய்யும் முக்கிய பருவமழையாகும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழையில் சுமார் 75-90% வரை வழங்குகிறது, இது விவசாயத்திற்கு மிக முக்கியமானது. இநத் காலக்கட்டத்தில், தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி, புதுவையில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, திண்டுக்கல், தேனி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]