சென்னை: 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம்பிடிக்கிறது என எம்பி மாணிக்கம் தாகூர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்து 5 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, திமுக உடனான உறவை முறித்துக்கொண்டு தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால், தவெக , காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
இதன் மூலம் 59 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர் காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள்.
தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர்.
ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.
கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய TVK தலைவர் அவர்கள் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார்.
தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும். புதிய அரசு.
புதிய நம்பிக்கை.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
[youtube-feed feed=1]