டெல்லி: ஓய்வுக்கு பின் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது தெற்கு ரயில்வே.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, வரும் 17ம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இது 3ம் கட்டமாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்காகும். அப்போது சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது. அரசு துறைகளில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அலுவலர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டும். ‘சி’ பிரிவு ஊழியர்கள் 33 சதவீதம் பணிக்கு வர வேண்டும் என்பதும் அந்த உத்தரவுகளில் ஒன்றாகும்.
இந் நிலையில், ஓய்வுக்கு பின் மீண்டும் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது தெற்கு ரயில்வே. அதற்கான உத்தரவையும் தெற்கு ரயில்வே பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: தெற்கு ரயில்வே பணிமனைகளில் மீண்டும் பணியில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற 368 பணியாளர்கள் நிறுத்தப்படுகின்றனர். 60 வயதுக்கு அதிகமானவர்கள் பணிக்கு அழைப்பதில் அதிக ஆபத்து உள்ளது. அவர்களுக்கான 15 நாட்கள் முன் அறிவிப்பு நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.