சென்னை:
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஓரிரு நாளில் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பிரிவு முழுவதும் 19 முக்கிய இடங்களில் முன்பதிவு கவுண்டர்கள் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், அந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்து செய்திருந்த பயணிகளின் டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே அறிவித்தது. அதன்படி நேரடியாக ரயில் டிக்கெட் எடுத்தவர்கள், ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்டர்களில் கொடுத்து, டிக்கெட்டை கேன்சல் செய்து, அதற்குரிய பணத்தை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த 4ந்தேதி முதல் சென்னை தவிர்த்து முக்கிய நகரங்களில் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ரத்து செய்யப்பட்டும் டிக்கெட்டுகளுக்கான பணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை மக்களின் வசதிக்காக சென்னையில் 19 முக்கிய ரயில் நிலையங்களில் முன்பதிவுக்கான கவுண்டர்கள் திறக்கப்பட இருப்பதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]