சென்னை

நேற்று மதியம் எழும்பூரில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

நேற்று மதியம் திடீரென சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் திடீரென தீவ்பது ஏற்பட்டது/  இதனால் யாருக்கும் எவ்வித தீங்கும் நேரவில்லை,.  ஆனால் தொலை தொடர்பு கேபிள்கள் பாதிக்கப்பட்டன.

தெற்கு ரயில்வே இது குறித்து,

”சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வெளியே காந்தி இர்வின் சாலைக்கு அருகில் நேற்று மதியம் 2.55 மணிக்கு சிறிய தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதியம் 3.10 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ விபத்து தொலைத்தொடர்பு கேபிளை மட்டுமே பாதித்தது. இந்த சம்பவத்தால் ரயில் செயல்பாடுகள், தகவல் அமைப்புகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

 தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.”

என விளக்கம் அளித்துள்ளது.