தீபாவளியை முன்னிட்டு தாம்பரம் – கொச்சுவேலி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு தமிழக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்கள் மற்றும் பேருந்துக்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். சென்னையிலிருந்து பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு திரும்ப முன்பதிவு செய்வதால், கூட்ட நெரிசல் மற்றும் முன்பதிவினை தவிற்கும் விதமாக சிறப்பு ரயிலை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக கொச்சுவேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும். அக்டோபர் 26ம் தேதி காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், இரவு 11 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்தி, முன்பதிவு செய்ய இயலாத மக்கள் பயன் அடைந்துக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.