திருவனந்தபுரம்,

பரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் பக்தர்களின் வசதிகள் குறித்து ஆலோசனை செய்ய தென்மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார்.

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை வரும் 15ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி, சபரிமலை வரும் பக்தர்களுக்கு   தேவையான வசதிகளை செய்துகொடுக்க மாநில அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் பணிகள் மேற்கொண்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து,  திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் இன்று   மாலை 5 மணிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் தென்மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா, கர்நாடகா முதல்வர்களும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.