சென்னை,
சென்னை கேஎம்சி அரசு மருத்துவமனையில் தென்மண்டல திசு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறப்பு வைத்தார்.
இந்த வங்கி தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த 6 மாநிலங்களுக்கும் சேர்த்து தென்மண்ட திசு வங்கியாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திறந்து வைத்து பேசினார். அப்போது, இதுபோல திசு வங்கி, மதுரை மற்றும் நெல்லையிலும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.
நோயாளிகள் தாமாகவே முன்வந்து தங்களது திசுக்களை வழங்கும் வகையில் திசு வங்கி செயல்படுகிறது.. இதன் மூலம் நோய் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் விளைவாக சமூகத்தில் பரவும் நோய்கள் மற்றும் அதை தடுப்பதற்கு தேவையான ஆராய்ச்சிக்கு திசு வங்கி பெரிதும் உறுதுணையாக இருக்கும்.
ஏற்கனவே புற்றுநோய் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய சென்னை ஐ.ஐ.டி.யில் ரூ.32 கோடி செலவில் தேசிய புற்றுநோய் திசு உயிரி வங்கி கடந்த 2014ம் ஆண்டு நாட்டிலேய முதன்முறையாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.