சியோல், தென் கொரியா
தென் கொரியாவில் உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது.
ஐமாக்ஸ் என்பது திரைப்பட உலகின் மற்றொரு தொழில்நுட்பம். அது ஸ்கிரீன் எக்ஸ் மற்றும் 4டி எக்ஸ் ஆகிய தொழில் நுட்பங்களை உள்ளடக்கியது. ஸ்கிரின் எக்ஸ் என்பது மெயின் ஸ்கிரின் மட்டுமின்றி இருபக்கவாட்டு திரைகளிலும் படம் ஒளிபரப்பப்படும். 4 டி எக்ஸ் என்பது மழை விழுவது, வாசனை வருவது, இருக்கைகள் நகருவது போன்றவைகள் ஆகும். திரை வழக்கமான திரையை விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும். படத்தின் விகிதம் 1.43 : 1 என அமைவதால் மிகத்துல்லியமான காட்சியாக விளங்கும்.
அத்தகைய ஒரு தியேட்டர் தென் கொரியாவின் தலைநகர் சியோலில் துவங்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனமான சிஜே சிஜிவி என்னும் நிறுவனம் அமைத்துள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய ஐமாக்ஸ் தியேட்டர் ஆகும். இந்த தியேட்டரின் திரை 31 மீட்டர் அகலமும், 22.4 மீட்டர் உயரமும் கொண்டது.
[youtube https://www.youtube.com/watch?v=AJHrB3hyfB8]