தென் கொரியாவில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மிக மோசமான விமான விபத்தில் 179 பேர் கொல்லப்பட்டனர்.
181 பேர் பயணம் செய்த இந்த விமானம் தீப்பிடித்த நிலையில் அதில் இருந்து இரண்டு விமானப் பணிப்பெண்கள் மட்டுமே பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்திற்கு பறவை தாக்குதலே காரணம் என்று கூறப்படும் நிலையில் கியர் பாக்ஸ் செயலிழந்த நிலையில் பெல்லி லேண்டிங் என்று சொல்லக்கூடிய அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
அப்போது ஓடுபாதையில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதியதால் ஏற்பட்ட தீயே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜெஜூ விமான நிறுவனம், போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென் கொரிய அரசு ஆகியவை இனைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த போயிங் 737-800 ரக விமானத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகள், விமான டேட்டா ரெக்கார்டர் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
இந்த கருப்பு பெட்டிகள் தற்போதுள்ள நிலையில் அதன் தரவுகளை மீட்கும் செயலமைப்பு தென் கொரியாவில் இல்லை என்று கூறப்படுவதை அடுத்து கருப்பு பெட்டிகளில் ஒன்றை ஆய்வுக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில் Muan விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளதால் அடையாளம் காணும் பணி மிகவும் கடினமாக உள்ளதாக தெரிவித்த அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் விரக்தி அடைந்துள்ள நிலையில் அவர்களிடம் உடல்களை ஒப்படைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.