சியோல்: ஹுண்டாய் மற்றும் கியா மோட்டர்ஸ் ஆகியவற்றிடம் சுமார் 2.4 லட்சம் கார்களை திரும்பப்பெற தென் கொரிய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அணு ஆயுதம், போர் என்று உலகையே கலங்கவைத்துக்கொண்டிருக்கிறது வட கொரியா. இந்த நிலையில், அதன் அருகில் உள்ள “எதிரி” நாடான தென்கொரியா இன்னொரு அதிரடியில் இறங்கியுள்ளது.
பிரபர கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாய் மற்றும் அதன் இணஐ நிறுவனமான கியா ஆகியவை தயாரித்த கார்களில், எரிபொருள் குழாய்கள் மற்றும் பார்க்கிங் பிரேக் லைட் ஆகியவற்றில் கோளாறுகள் இரு இருப்பது தெரியவந்தது.
ஏற்கெனவே இதே போன்ற புகார் எழுந்தபோது, சுமார் 1.5 மில்லியன் கார்களை மாற்றித்தர ஹுண்டாய் மற்றும் கியா நிறுவனம் ஒப்புக்கொண்டன. இப்போது மேலும் 2.4 லட்சம் கார்களிலும் பிரச்சினைகள் இருப்பதால், இது குறித்தும் இந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால் இந்த நிறுவனங்கள், “இப்போதுதான் 1.5 மில்லியன் கார்களை மாற்றித்தர ஒப்புகொண்டோம். மீண்டும் 2.4 லட்சம் கார்களை மாற்றத் தர முடியாது” என மறுத்தன.
இந்த நிலையில், தென் கொரிய அரசு, “அந்த இரு நிறுவனங்களும் 2.4 லட்சம் கார்களையும் திரும்பப்பெற்று புதிய கார்களை அளிக்க வேண்டும்” என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஒரு நாட்டின் அரசு, வாகனங்களை கட்டாயமாக திரும்பப்பெற வேண்டும் என்று உத்தரவிடுவது உலகிலேயே இதுதான் முதல் முறை.