ஐ.நா. சபையின் பரிந்துரையின்படி வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருட்கள் அனுப்பவில்லை: தென் கொரியா மீது புகார்

சியோல்:

ஐ.நா. சபை பரிந்துரையின்படி, கடந்த ஆண்டுக்கான 300 டன் பெட்ரோலியப் பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்ப தென்கொரியா தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.


இது குறித்து வடகொரிய என்கே செய்தி இணையதளம் வெளியிட்ட செய்தியில்,ஐ,நா சபையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதை தென்கொரியா தளர்த்தி வருகிறது.

தென்கொரியாவுக்கு அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டங்களை கைவிட்டுவிடுவோம் என அமெரிக்கா கொடுக்கும் நிர்பந்தமே இதற்கு காரணம்.

2018-ல் 341 டன் பெட்ரோலியப் பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்பியதாக தென் கொரியா கூறுகிறது. ஆனால், ஐ.நா சபைக்கு இது குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள தென்கொரிய அரசு, வடகொரியாவுடனான பரிமாற்றங்கள் மற்றும் கூட்டுறவுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஐ.நா.சபையின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இரு நாடுகளுக்கிடையேயான திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவே பெட்ரோலியப் பொருட்களை வடகொரியாவுக்கு அனுப்பி வருகிறோம். இது வடகொரியாவுக்கான ஐநா சபை பரிந்துரைகளை பாதிக்காது.
இது குறித்து ஐநா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகள் கூறும்போது, வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருட்களை அனுப்பி தகவலை சீனாவும் ரஷ்யாவும் மட்டுமே தெரிவித்துள்ளன என்றனர்.

வடகொரியாவுக்கு பெட்ரோலியப் பொருட்களை அனுப்பும் விவரத்தை ஒவ்வொரு மாதமும் தெரிவிக்குமாறு கடந்த 2017-ம் ஆண்டு ஐநா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.

இதன்படி, ஐ,நாவின் உறுப்பு நாடுகள் அனைத்தும் 5 லட்சம் டன் பாரல்கள் பெட்ரோலியப் பொருட்களை, ஒவ்வொரு ஆண்டும் வடகொரியாவுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வட கொரியா மற்றும் தென் கொரியாவில் பிரிந்து வாழ்ந்த குடும்பங்கள் இணைந்தபோது, பெரும்பாலான பெட்ரோலியப் பொருட்கள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் கூட்டாக ரயில்வே திட்டங்களும் செயல்படுத்தும் பணி தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

1950-54 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையே நடந்த போருக்குப் பின், ரயில் போக்குவரத்து மற்றும் சாலைகள் இணைப்பு பணியை இரு நாடுகளும் செயல்படுத்துகின்றன.

இந்நிலையில், தற்போது ஐநாவிடம் விதிவிலக்கு பெற்று 32.3 டன் பெட்ரோலியப் பொருட்களை திரும்பப் பெற்றதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: தென்கொரியா மீது புகார்., வடகொரியாவுக்கு பெட்ரோல் அனுப்பவில்லை
-=-