தென் கொரியாவில் உருமாறிய கொரோனா தாக்கம்: பிரிட்டன் விமானங்களுக்கான தடை ஜனவரி 21 வரை நீட்டிப்பு

Must read

சியோல்: உருமாறிய கொரோனா தொற்றின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கான தடையை மேலும் 2 வாரங்கள் தென்கொரியா நீட்டித்துள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை துண்டித்து உள்ளன.

இந் நிலையில் தென்கொரிய நாட்டில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்நாடு பிரிட்டன் விமானங்களுக்கு விதித்திருந்த தடையை ஜனவரி 21ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

அதற்கான அறிவிப்பை தென்கொரிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. முன்னதாக டிசம்பர் 28ம் வரை விதிக்கப்பட்டு இருந்த தடை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் இதுவரை உருமாறிய கொரோனா தொற்று 11 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article