ஜோகன்னஸ்பர்க்:

 கடந்த ஆண்டு  தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma)  மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க அவரது கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்  முடிவு செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், அவர் மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர  அவரது கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முடிவு செய்ததால், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக ஜூமா அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதியாக  கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஜேக்கப் பதவி வகித்து வருகின்ற நிலையில் அவர் மீது பல்வேறு   ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜேக்கப் ஜுமாவை நாட்டின் ஜனாதிபதியாக பதவி நீக்கம் செய்ய ஆளும் கட்சியான  ஆபிரிக்க தேசிய காங்கிரசின் (ANC) தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜுமாவை ராஜினாமா செய்ய 48 மணி நேரம் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூமா பதவி விலக மறுத்து வந்தார். இதன் காரணமாக அவர்மீது மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பதவியில் இருந்து நீக்க கட்சி தலைமை ஈடுபட்டதை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜேக்கப் ஜூமா (jacob ZUMA).

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜூமா, “எனது கட்சி மற்றும் எனது கூட்டாளிகள் என்னை  பதவியில் இருந்து அகற்றப்பட  விரும்புகிறார்கள். அவர்களின் உரிமையை உரிமையை நான்  நடைமுறைப்படுத்த வேண்டும், அரசியலமைப்பின் பரிந்துரைப்படி அவ்வாறு செய்ய வேண்டும்,” என்று ஜுமா கூறினார்.

ஜூமாவின் ராஜினாமாவுக்கு , ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது., திரு ஜுமாவின் “விசுவாசமான சேவைக்காக” கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஜனாதிபதி பதவியில் இருந்துள்ளார். அவர், கட்சியின் தற்போதைய தலைவர் ராமபோசாவுக்கு ஆதரவளிக்கும் வகையில் கட்சியினரை ஊக்குவிப்பார் என்றும் கூறி உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் அடுத்த அதிபராக, தற்போதைய கட்சி தலைவரான  ராமபோசா விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக நிலவி வந்த தென்னாப்பிரிக்கா அரசியல் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.