டெல்லி:

பல மிருகங்களை வேட்டையாடி கொன்று குவிந்த பிரபல வேட்டைக்காரர் முதலைகளுக்கு இரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்ரிக்காவை சேர்ந்தவர் ஸ்காட் வேன் ஜில். 44 வயதான இவர் பிரபல வேட்டைக்காரர். இவரது வேட்டை திறமையால் பல விலங்குகளை கடந்த காலங்களில் வேட்டையாடியுள்ளார். வெளிநாட்டு வாடி க்கையாளர்களுக்காக இவர் பிரத்யேகமாக வேட்டை பயணங்களை மேற்கொண்டு யானை, சிங்கம், காட்டெருமை, காண்டாமிருகங்களை வேட்டையாடியுள்ளார்.

வன பயணங்களுக்கும் ஏற்பாடு செய்து கொடுப்பார். எஸ்எஸ் ப்ரோ சபாரிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். வேட்டை பயணத்திற்கு நாய்களையும் உடன் அழைத்துச் செல்வார். கடந்த சில நாட்களுக்கு முன் ஸ்காட் மற்றும் ஜிம்பாப்வேயை சேர்ந்த வன பயணி ஒருவருடன் சிக்வாராகா முகாம் பகுதிக்கு சென்றார்.

வழக்கம் போல் நாய்களையும் அழைத்துச் சென்றார். வன பயணியின் வேலை முடிந்தவுடன் அவரை திருப்பி அனுப்பிவிட்டார் ஸ்காட். இந்நிலையில் அவருடன் சென்ற நாய்கள் இருப்பிடத்திற்கு திரும்பி வ ந்துவிட்டன. ஆனால் ஸ்காட் திரும்பவில்லை. அவரது துப்பாக்கியும் அவரை அழைத்துச் சென்ற வாகனத்தில் இருந்தது.

இதையடுத்து ஹெலிகாப்டர்கள், உள்ளூர் கிராம மக்களுடன் சேர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஸ்காட் புகைப்படத்துடன் கூடிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தும் தேடி பார்த்தனர். இறுதியில் அவரது உடமைகள் லிம்போபோ ஆற்றங்கரையோரத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

அதனால், ஸ்காட்டை 2 நைல் முதலைகள் கடித்து சாப்பிட்டிருக்கும் என்று தேடுதல் குழுவை சேர்ந்த சாக்கி லாவ்ரன்ஸ் தெரிவித்தார். ஸ்காட்டின் உடல் பாகங்களை முதலைகள் எதுவும் மிச்சம் வைத்துள்ளதா என்பதை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறனர்.

இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல. தெற்கு ஜிம்பாவ்வே ஆற்றங்கரையோரம் செல்லும் மக்களை முதலைகள் கடித்து கொன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல முறை நடந்துள்ளது. யானை, சிறுத்தைகளை வேட்டையாடிய ஒரு மனிதரை முதலைகள் இரையாக்கி கொண்டன என்று ஏ ஜே பிளஸ் டுவிட்டர் ப க்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.