பிரிட்டோரியா: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவர் எடுத்துள்ள விக்கெட்கள் சாதனைக்குரியது. அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது வீரர் என்ற சாதனைக்கு சொந்தமானவர்.
இந்த தலைமுறையின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தென்னாப்பிரிக்காவின் 38 வயதான டேல் ஸ்டெய்ன், அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக டிவிட்டரில் ஒரு பதிவின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டென் ஸ்டெய்ன் கடந்த 2004ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். தொடக்க காலத்தில், தென்னாப்பிரிக்காவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். அதையடுத்து அனைத்து வகையான போட்டிகளிலும் பங்குபெற்ற்றார்.
தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கேல் ஸ்டெய்ன் இதுவரை 265 போட்டிகளில் 699 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 439 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவர் எடுத்துள்ள விக்கெட்கள் சாதனைக்குரியது. அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 8வது வீரர் என்ற சாதனைக்கு சொந்தமானவர். இது தவிர, ஸ்டெய்ன் 125 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும், 47 டி 20 சர்வதேச போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட தொடர்ச்சியான காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து, மற்ற போட்டிகளில் கலந்துகொள்ளும் வகையில், அவர் உடல் தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்டு வந்ததார். இந்த நிலையில், ஸ்டெய்ன், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று டிவிட் மூலம் அறிவித்து உள்ளார்.
டேல் ஸ்டெய்ன் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 95 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.