தென்னாப்பிரிக்க சிறுத்தையான ‘காமினி’ மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.

இதன்மூலம் இந்தியாவில் பிறந்த சிறுத்தைக் குட்டிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

குனோ தேசிய பூங்காவில் இந்த குட்டிகள் உட்பட மொத்த 26 சிறுத்தைகள் உள்ளன.

இந்த ஆண்டு ஜனவரியில், நமீபிய சிறுத்தை ‘ஜ்வாலா’ குனோ தேசிய பூங்காவில் நான்கு குட்டிகளை ஈன்றது.

இந்தியாவில் சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக 1952 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டு நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன.

அதன்பிறகு, 2023 பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பன்னிரண்டு சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.