
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 157 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி 302 ரன்களையே எடுத்தது. அந்த அணியின் டீன் எல்கர் 127 ரன்களைக் குவித்தார். வான் டெர் டுஸேன் 67 ரன்களை அடித்தார்.
இலங்கை தரப்பில், விஸ்வா பெர்ணான்டோ 5 விக்கெட்டுகளை கைப்பற்ற, அசிதா பெர்ணான்டோ மற்றும் டாசன் ஷனாக தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
மொத்தம் 145 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இலங்கை அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், 150 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, எதிரணியைவிட 5 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
அந்த அணியின் டிமுத் கருணரத்னே 91 ரன்களை அடித்து நாட்அவுட்டாக உள்ளார். லஹிரு திரிமன்னே 31 ரன்களை அடித்தார்.
தென்னாப்பிரிக்க சார்பில் லுங்கி கிடிக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்துள்ளது. இலங்கையை விரைவாக சுருட்டும் பட்சத்தில், தென்னாப்பிரிக்க அணி இப்போட்டியிலும் வெற்றியை உறுதி செய்து, இலங்கையை வாஷ் அவுட் செய்யலாம்.
[youtube-feed feed=1]