
நாட்டுடமையாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதால், இந்த நாவலை திரையில் கொண்டு வர பலரும் முயன்று வருகின்றனர்.
அந்த வகையில், ரஜினிகாந்தின் இளையமகள் செளந்தர்யா, ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வெப் சீரிஸாக எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாராம்.
செளந்தர்யாவின் மே 6 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், எம்.எக்ஸ் பிளேயர் நிறுவனமும் இணைந்து ‘பொன்னியின் செல்வன்’ வெப் சீரிஸை தயாரிக்க இருக்கிறார்களாம்.
இதில், வந்தியத்தேவனாக ‘தரமணி’ புகழ் வசந்த்ரவி நடிக்க, குந்தவையாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறாராம்.
இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க இருக்கிறதாம்.
Patrikai.com official YouTube Channel