
சென்னை,
ரஜினி மகள் சௌந்தர்யா, இன்று அதிகாலை தனது காரை, ஆட்டோ ஒன்றின் மீது மோதி டிரைவக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது:
நடிகர் ரஜினகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. கருத்து வேற்றுமை காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டை விட்டு கிளம்பிய சௌந்தர்யா, இன்று அதிகாலை திரும்பினார்.
அப்போது டி.டி.கே. சாலை வழியாக, மௌபரிஸ் சாலை நோக்கி திரும்பியோது, அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது தனது காரை மோதிவிட்டார்.
இதனால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்தது அதிகாலை 4.30 மணி என்பதால், சாலையில் நடமாட்டம் இல்லை. பதட்டமடைந்த சௌந்தர்யா, உடனடியாக தனது அக்காள் கணவரான நடிகர் தனுஷை மொபைலில் அழைத்து விபரம் சொல்லியிருக்கிறார்.
உடனே சம்பவ இடத்துக்கு வந்த தனுஷ், அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் சமாதானம் பேசி, கொஞ்சம் பணமும் கொடுத்திருக்கிறார். பிறகு ஓட்டுநரை மருத்துவமனைக்கும் அனுப்பியிருக்கிறார்.
பிறகு இந்தத் தகவல் நடிகர் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரும், பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்தாராம்.
“சட்டம், நீதி என்று சினிமாவில் பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர்கள், நிஜத்தில் இப்படித்தான் தங்கள் குற்றங்களை மூடி மறைக்கிறார்கள்” என்று முணுமுணுப்பு கேட்கிறது கோலிவுட்டில்
[youtube-feed feed=1]